Elliott Wave Theory என்னோட மார்க்கெட் அனாலிசிஸ் ல என்ன ரொம்பவே கவர்ந்த ஒன்னு . கிட்டத்தட்ட எல்லா விதமான மார்கெட்லயும் இத அப்ளை பண்ணி ரொம்பவே accurate ஆன ட்ரடே என்னால எடுக்க முடிஞ்சிச்சு.
Financial Market ல Technical Analysis அப்படிங்கிறது மிக முக்கியமான பங்குவகிக்குது. பல experts மற்றும் trader கள் பலவிதமான strategy களை பயன்படுத்துவாங்க. இன்னைக்கு இந்த பதிவுல நான் என்னோட சொந்த அனுபவத்துல தெரிஞ்சிகிட்டத்த உங்ககிட்ட பகிர்ந்துக்கபோறேன்.
Elliott wave தொடக்கம்
கிட்டத்தட்ட 1930 களில் ரால்ப் நெல்சன் எலியட் அப்டிங்கறவரு ஒவ்வொரு காலகட்டத்திலயும் மார்க்கெட் ஒருவிதமான move ஆகுறத கவனிச்சு உருவாக்குனது தான் இந்த எலியட் வேவ் தியரி. மார்கெட் திரும்ப திரும்ப மேலும் கீழுமா போவதை கவனிச்சு அத ஒரு வேவ் தியரி ஆக உருவாக்கிருக்கார்.
Wave Formation

அப்டி இந்த எலியட் வேவ் அனாலிசிஸ் ஐ ரெண்டு விதமா பிரிக்கலாம்,
- Impulse Wave
- Corrective Wave
ஒவ்வொரு முழுமையான wave structure லையும் 1,2,3,4,5 என 5 impulse வேவ் களும், A,B,C என corrective wave களும் இருக்கும் .
ஒவ்வொரு முறை மார்க்கெட் மேல்நோக்கி போவதை Impulse Wave என்றும் அதற்க்கான correction ஐ கரெக்ட்டிவ் வேவ் என்றும் நாம பிரிக்கலாம் . இயல்பாகவே மார்க்கெட் எப்போதும் மேல் நோக்கி மட்டும் செல்வதில்லை. அதே நேரத்தில் கீழ்நோக்கியும் செல்வதில்லை. அதற்கிடையே சின்ன சின்ன corrections நடக்கும். இது Uptrend லையும் நடக்கலாம் Down Trend லையும் நடக்கலாம் .
ஒரு Market beginner ஆகவோ expert ஆகவோ நீங்க இருக்கலாம். எப்படி இருந்தாலும் உங்களுக்கு பெரும்பாலான அடிப்படை விஷயங்கள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நான் நம்புறேன். அதனாலே நான் நேரடியா Wave Theory ஐ explain பண்றேன் .
ஒரு முழுமையான wave structure முடிய impulse மற்றும் corrective wave களை நாம சரியா கண்டுபிடிக்கணும்.
Impulse Wave
Impulse Wave இதுல மொத்தம் 5 waves இருக்கும். wave 1 ஐ நம்மளால எப்போவுமே உடனே கண்டுபிடிக்க முடியாது . மார்க்கெட் ல எப்பவுமே ரொம்ப பொறுமையா இருந்து டேட்டா நெறய கிடைச்ச பிறகு தான் நம்மளால இது வேவ் 1 ஆ இல்ல 2,3,4,5 ஆ ன்னு சொல்ல முடியும். அதுனால தான் பொறுமையே பெருமை !
1, 3 , 5 இந்த wave களை நாம impulse or motive wave னு சொல்றோம் . இதுல wave 1 ஐ நம்மளால உடனடியா find பண்ண முடியாது. இந்த முதல் வேவ் குள்ளையும் ஐந்து வேவ்களை நாம find பண்ணலாம் . இது ஒரு loop மாதிரி திரும்ப திரும்ப உருவாகிகிட்டே இருக்கும் .
முக்கியாமாக 1w , 1d ,4h timeframes களில் wave theory ஐ அப்ளை செய்து பார்ப்பது தான் நல்லது timeframes குறைய குறைய சரியான wave ஐ கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம்.
Corrective Wave
இதுல மொத்தம் 3 wave கள் இருக்கும். இதை நாம A,B,C என மூனா நாம எடுத்துக்கலாம். மொத்த எலியட் வேவ் தியரி ளையும் wave 2, 4 ,B இந்த மூணும் corrective waves. 2 வது மற்றும் 4 வது wave களுக்குள்ளயும் A,B,C smaller timeframe waves உருவாகும். இதை எல்லாத்தையும் நீங்க சுலபமாக புரிஞ்சிக்க மேலே இருக்கிற இமேஜ் களை பாருங்க.

மொத்த Elliott Wave விளக்கம்
Wave 1
இந்த move ஐ ஒரு மார்க்கெட் chart-ன் தொடக்கத்துல தான் நாம மார்க் பண்ணனும். இந்த wave 1 குள்ள 1,2,3,4,5 என மொத்தம் ஐந்து வேவ் இருக்கும் . அதனால் இதில் ட்ரடே செய்யாமல் இருப்பது நல்லது . இது சில நேரங்கள்ல Leading diagonal ஆகவும் உருவாகும். அப்டினா என்னனு தான நீங்க கேக்குறீங்க பின்னாடி வரபோற ஒவ்வொரு பதிவுலயும் நாம பாக்கலாம் .
Wave 2
இது ஒரு corrective wave ஆகும். இது complicated ஆகவும் இருக்கலாம் அல்லது சிம்பிள் ABC ஆகவும் இருக்கலாம். கீழுள்ள image ஐ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .
Wave 3
இந்த wave 3 தான் இருப்பதிலேயே ரொம்ப longest ஆ உருவாகும் . இதோட movement ரொம்பவே அதிவேகமா இருக்கும் . இதுல தான் பெரும்பாலான ட்ரடேஸ் நடக்கும். இதுக்குள்ளயும் 5 வேவ் நாம count பண்ணலாம் .
Wave 4
இதுவும் ஒரு corrective wave தான் wave 2 சிம்பிள் formation ஆக இருந்தால் இந்த wave complicated correction ஆக இருக்கும் . இல்லையென்றால் சிம்பிள் correction ஆக இருக்கும்
Wave 5
wave 5 ஒரு impulse move ஓட முடிவு தான். இதுல பெரும்பாலான ட்ரடேர்கள் வெளியேறுற இடம் இது . இதுக்குள்ளயும் 5 waves இருக்கும் ( முதல் மற்றும் மூன்றாவது வேவ் போலவே ). சில நேரங்கள்ல Ending diagonal ஆகவும் இது முடியும். இந்த விஷயத்தையும் நாம பின்னாடி வர்ற பதிவுகள்ல பார்க்கலாம்.
A wave
ஒரு முழு impulse க்கிற்கு பிறகு correction தொடங்கும் இதில் முதல் wave A. இது 1,2,3,4,5 என impulse ஆகவும் உருவாகலாம் அல்லது A B C ஆகவும் உருவாகலாம். இந்த மூன்று wave களுக்குள்ளும் impulse மற்றும் corrective wave களை நாம் பார்க்கலாம்.
B wave
இதை இருந்து விதமாக பார்க்கலாம். ஓன்று ABC wave pattern மற்றொன்று complex ஆன ABCDE pattern.
C wave
இந்த wave-ம் ஒரு impulse ஆகவும் இருக்கும். ABC ஆகவும் இருக்கும். இந்த மேலே குறிப்பிட்ட corrective wave களை பற்றி நாம் தெளிவாக அடுத்த பதிவில் முழுமையாக பார்ப்போம் .
Elliott wave விதிமுறைகள்
Elliott wave பொறுத்தவரை சில முக்கியமான விதிமுறைகள் உள்ளன. இதை நீங்கள் பின்பற்றி தான் wave plot செய்யணும். எதாவது ஒரு விதியை மீறினாலும் wave analysis தவறாகிவிடும்.

Important Rules Of Elliott wave Theory
- முதல் wave ற்கு எந்த விதியும் இல்லை .
- இரண்டாவது wave முதல் wave ன் அடிமட்டத்திற்கு கீழ் போக கூடாது.
- wave 3 எப்போதுமே ரொம்ப வேகமாகவும் நீளமானதாகவும் இருக்கும் .
- wave 4 ஆனது wave 1ன் மேல் உயரத்திற்கு கீழ் வரக்கூடாது. அதாவது wave 1ன் top ற்கு கீழ் over cross ஆகா கூடாது .
- wave 5 ஆனது 3 அளவுக்கு வேகமாக இருக்காது அதே நேரத்தில் ரொம்ப குறுகிய தாக சில நேரங்களில் இருக்கும் .

Fibonacci ன் பங்கு
உங்க எல்லாருக்கும் Fibonacci னா என்னனு ஏற்கனவே தெரிந்திருக்கும்னு நினைக்குறேன் . இந்த Fibonacci ங்கற விஷயம் நம்ம அன்றாட வாழ்க்கையில் இருந்து உலகின் பல முக்கியமான விசயத்துல பொருந்தி போகுது .
இந்த fibonacci tool ல இருக்குற ஒவ்வொரு அளவீட்டுலயும் மார்க்கெட் ரொம்பவே சூப்பர் ஆக ரியாக்ட் ஆகும் . இதுல ரொம்ப முக்கியமாக 0.618 அப்டிங்கத Golden Ratio னு சொல்லுவாங்க இதுல ஒவ்வொரு முறை மார்க்கெட் மீட் பண்ணும்போதும் ரொம்பவே ரியாக்ட் செய்யும் .
Elliott wave தியரி ல இந்த fibonacci retracement மற்றும் extension டூல் ரொம்ப பயனுள்ளதா இருக்கும். இதை பத்தின தெளிவான முழு விளக்கத்தை வரப்போற பதிவுகள்ல பார்க்கலாம்.
Trading View ல் Elliott Wave Tool Use பண்ணுவது எப்படி
Trading view வை பத்தி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அதுல elliottwave எப்படி பயன்படுத்துறதுன்னு சொல்லும். முதல்ல Trading View வெப்சைட் ல login பண்ணிக்கோங்க. அதுல side ல இருக்குற tools ல எலியட் வேவ் செலக்ட் பண்ணிக்கோங்க .
நீங்க Wave plot பண்ணும்போது இந்த ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கணும். Wave settings ல் Degree அப்டினு ஒன்னு இருக்கு அது எதுக்காக குடுத்துருக்காங்கன்னா. இப்போ நீங்க longer timeframe ல wave theory பயன்படுத்தபோறிங்கண்ணா, அதுக்கொரு degree அப்பறோம் lower timeframe கு இன்னொரு டிகிரி என நீங்க use பண்ணலாம் .
கீழுள்ள இமேஜ் பாருங்க degrees சரியாய் மார்க் பண்ணி நான் போட்ருக்கேன். அதே நேரத்துல டிபிபிறேன்ட் timeframe கு different degree எப்படி போடணும்னும் சொல்லிருப்பேன். டிகிரி அப்படிங்கிறது உங்களுக்கு timeframe ல் வித்தியாசம் தெரிய மட்டும் தான் தவிர வேறொண்ணுமில்ல .

Elliott wave நிறைவு
இந்த பதிவுல நாம மொத்தமாவே ஒரு முன்னோட்டத்தை தான் பாத்துருக்குஒம். இதுல சொல்லிருக்குற விஷங்கள் எல்லாமே என்னோட சொந்த அனுபவங்கள் . Elliott wave பொறுத்தவரை “practice makes perfect” தான். அதுனால நீங்க தினமும் practice பண்ணா மட்டும்தான் உங்களால கத்துக்க முடியும் . அடுத்த பதிவுல Fibonaci மற்றும் Fibonacci Extension பத்தி பார்க்கலாம் .